தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-05-03 17:45 GMT
பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் கிராமத்தில் உள்ள சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்