சென்னை கொளத்தூர், தலைமைச்செயலகம் காலனி 4-வது தெருவில் மழைநீர் கால்வாய் சேதமடைந்து அங்குள்ள கழிவுநீர் சாலை முழுவதும் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயினை சீரமைக்க வேண்டும்.