கரூர் மாவட்டம் கொங்கு நகர், அம்மன் நகர் வடக்கு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு சிமெண்டு கொட்டப்பட்ட நிலையில், பணிகள் முழுமையாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.