மதுரை மாநகராட்சி செல்லூர் தாகூர் நகர் பகுதியில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தேங்கிய கழிவுநீரை அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.