தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-01-05 11:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வாய்க்காலை தூர்வாருவதுடன் இரவு நேரத்தில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்