கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் புதிய நகராட்சி நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரே பாதாள சாக்கடையின் மூடியில் ஏற்பட்ட சேதத்தினால் வெளியேறும் கழிவுநீா் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் நகராட்சி அலுவலகம் வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாதாளசாக்கடை மூடியை சரிசெய்து கழிவுநீரினை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.