சென்னை அமைந்தகரை டோல்கேட் பஸ் நிறுத்தமும், சுப்பராயன் தெருவும் சந்திக்கின்ற ஒரு இடம் உள்ளது. இந்த இடத்தில் சாலையின் நடுவில் உள்ள கழிவுநீர் மூடியின் கைப்பிடி உடைந்து ஆபத்தான முறையில் காணப்படுகிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.