கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்

Update: 2024-12-01 13:21 GMT

சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் 9-வது சந்து சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்