ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2024-11-24 17:57 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கழிவு நீர் குழாய் செல்கிறது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இதனால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்