பழனியை அடுத்த மானூர் பள்ளிவாசல் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று உருவாகும் சூழல் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.