மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நரசிங்கம்பட்டி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் சாலைகளில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றி இனி இதுபோன்று தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.