சுகாதார சீர்கேடு

Update: 2024-11-24 16:32 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிட வளாகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இங்கிருந்து கசியும் கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்த பகுதியில் கழிவுநீர் கசிந்து நீண்ட நாட்கள் தேங்கி நிற்பதை தடுக்க உரிய சீரமைப்பு பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்