கோவையை அடுத்த கஞ்சப்பள்ளி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக மண் கலந்த நிலையில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை குடிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலக்கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பணம் கொடுத்து பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.