மரக்காணம் அடுத்த சிறுவாடி உசேன் நகர் 2-வது தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.