தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-11-17 17:44 GMT
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் முருகன் கோவில் அருகில் குளம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் அந்த குளத்தில் சென்று கலந்து வருகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்