சுகாதார சீர்கேடு

Update: 2024-11-17 17:42 GMT
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் சிவன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்