மதுரை நகர் வடபழஞ்சி அருகே, மதுரை காமராசர் பல்கலை – திருப்பரங்குன்றம் பிரதான சாலை சந்திக்கும் பகுதியில் கழிவு நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதில், கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.