சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை புதுக்காலனி 8-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருவில் தேங்குகிறது. மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருவில் குளம்போல் தேங்குவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.