காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு இரகுநாதபுரம், திருவள்ளுவர் சிட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீரை குழாய் மூலம் அந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விடுகின்றனர். இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அருகில் கோவில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் படி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீரை விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.