சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2024-11-10 09:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுரபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலஞ்சேரி, அம்பேத்கார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியில் நிற்பதால் சாலையில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்