முதலியார்பேட்டை காராமணிக்குப்பம் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு, சாலையோரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்படாததால், மழை பெய்தால் மீண்டும் கால்வாயில் சேரும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனே அகற்றவேண்டும்.