மதுரை மாநகர் செல்லூர் மனவாளன் நகர் 2-வது தெருவில் நீண்ட நாட்களாக சாலையில் கழிவு குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வழியே கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன் ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.