திருவள்ளூர் மாவட்டம் பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, ஒத்த வாட தெரு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வால் பல ஆண்டுகளாக பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.