சென்னை கொளத்தூர் பிரதான சாலையிலிருந்து கணபதிராவ் நகர் 1-வது தெரு திரும்பும் முனையில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.