தூர்வார வேண்டும்

Update: 2024-11-03 08:57 GMT

கொட்டாரத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் பெரியவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடையில் கழிவுகள் அடைத்துள்ளது. இதனால் மழைநீர் ஓடையில் வடிந்தோட வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து பாய்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி மழைநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்