குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2024-10-27 17:04 GMT
சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு கிராமத்தில் எம்.ஜி.ஆர்.நகர், பொருவளூர், வடக்கு தெரு, தெற்கு தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அங்குள்ள அம்மன்கோவில் அருகில் சாலையின் வளைவு பகுதியில் உடைந்த குழாய் வழியாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அதை பயன்படுத்தும் மக்களுக்கு காலரா, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதோடு, குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்