சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் உள்ள தெருவில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் வழிந்தோடுகிறது. மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.