பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-10-27 15:31 GMT

திண்டுக்கல் பஸ் நிலைய வளாகத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த பள்ளங்களில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்குள் கழிவுநீர் தேங்காமல் தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்