தேனி அருகே அரண்மனைபுதூர் ஊராட்சி 9-வது வார்டு கவுண்டர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீருடன் சேர்ந்து தெருவில் செல்கிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.