கரூர் அருகேயுள்ள நாவல் நகர் 4-வது தெருவில் கழிவு நீர் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலைகளில் தேங்கி விடுகிறது இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைநீரும், கழிவுநீருடன் சேர்ந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.