சிவகங்கை மாவட்டம் சிலுக்கப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மழைநீர் வடிகால் இல்லாமல் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே கடந்து செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமமடைகின்றனர். மேலும் கொசுத்தொல்லையால் சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் அவதியடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.