தஞ்சை மாநகராட்சி 15-வது வார்டு ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு பகுதி சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் அடிக்கடி வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?