திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காப்பட்டியில் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் சிலர் கற்கள், சிலாப்புகளை போட்டுள்ளனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள கற்கள், சிலாப்புகளை உடனடியாக அகற்றுவதுடன் தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.