சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன் இதில் இருந்து கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், கொசுமருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.