கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் தற்காலிகமாக கழிவுநீர் செல்லும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மழை பெய்யும் போது இந்த வாய்க்காலில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மழை பெய்யும் நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் சிமெண்டு கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.