ராமநாதபுரம் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். தேங்கிய தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மழைநீர் தேங்காமல் இருக்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.