கோவை சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரம் மேடு பகுதியில் நேரு பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அதில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.