கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் விநாயகர் கோவில் 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இங்கு கனமழை பெய்யும்போது கழிவுநீரோடு மழைநீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வசிப்பவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு உயர் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.