மாணவர்கள் அவதி

Update: 2024-10-13 11:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணி முடிவடைந்தும் இந்த பள்ளம் அப்படியே போடப்பட்டது. இதனால் அந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, கிராம நிர்வாகம் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்