சென்னை அடையாறு, பெசன்ட் நகர் 1-வது அவென்யூ, இந்தியன் வங்கி அருகில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில் மக்கள் நடமாற்றம் அதிகம் உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகம் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரி கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.