பள்ளப்பட்டியில் இருந்து கொட்டப்பட்டிக்கு செல்லும் பழைய கன்னிவாடி சாலையில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே முறையாக சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்.