அந்தியூர் அருகே கீழ்வானி கிராமத்தில் அமைந்துள்ள பொன்நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.