தேனி அல்லிநகரம் கபிலர் தெருவில், சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக சீரமைக்க வேண்டும்.