திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர், மகேந்திரா சிட்டி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் அருகில் உள்ள புதுவள்ளூர் மற்றும் நயப்பாக்கம் ஏரியில் கலக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், ஏரியில் உள்ள மீன்களும் கழிவுநீரால் உயிரிழக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.