ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் தெரு இடையர்குடி சந்து பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.