ராமநாதபுரம் மாவட்டம் மகர் நோன்பு பொட்டல் ரோடு அய்யப்பன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?