தமிழக-கேரள எல்ைலயில் பந்தலூர் அருகே நம்பியார்குன்னு, மதுவந்தால் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு இருமாநில பொதுமக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் ஒரு கழிப்பிட வசதி கூட இல்லை. இதன் காரணமாக அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு கழிப்பிடம் கட்டி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராஜா, நம்பியார்குன்னு.