ஈரோடு பெரியசேமூர் சோழா நகரில் உள்ள சாக்கடை கால்வாய்கள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. குடியிருக்கும் வீடுகளின் அருகிலேயே கழிவுநீர் தேங்கி கால்வாய் நிரம்பி வழிகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. எனவே கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.