கூடலூர் அருகே 9-ம் மைல் மேபீல்டு சாலையின் மேற்பகுதியில் சில குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கீழ்பகுதியில் உள்ள சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பிரச்சிைனக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.