ஸ்ரீவில்லிபுத்தூர் கன்னிமார்கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையான பராமரிப்பு இன்றி குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் மழை பெய்யும் நேரங்களில் வாறுகால் நிரம்பி மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.